search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்களுக்கு குடியுரிமை"

    கடந்த 2017-ம் ஆண்டில் 50, 802 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. #USCitizenship #indians
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் எச்-1பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வழி வகை செய்யும் விதத்தில் எச்-1பி விசா வழங்குவதில் கடுமையான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    மேலும் எச்-1பி விசாவில் பணிபுரிவோரின் துணைவர்கள் வேலை பார்க்க வழங்கப்படும் எச்-4 விசாவை ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 2017-ம் ஆண்டில் 50, 802 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    இது கடந்த 2016-ம் ஆண்டைவிட 4 ஆயிரம் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2016-ம் ஆண்டில் 46,188 பேரும், 2015-ம் ஆண்டில் 42,213 பேரும் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

    இவர்களில் 12 ஆயிரம் பேர் கலிபோர்னியாவிலும், நியூஜெர்சியில் 5,900 பேரும், டெக்காசில் 3,700 பேரும், நியூயார்க், பென்சில்வேனியாவில் 7,100 பேரும் தங்கியுள்ளனர்.

    மொத்ததில் கடந்த 2016-ம் ஆண்டில் 7 லட்சத்து 7 ஆயிரத்து 265 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து18 ஆயிரத்து 559 பேர் மெக்சிகோவை சேர்ந்தவர்கள்.

    இவர்கள் தவிர சீனாவை சேர்ந்த 37,674 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டினர் 36,828 பேரும், டெமெனி குடியரசை சேர்ந்த 29,734 பேரும், நியூயார்கை சேர்ந்த 25,961 பேரும் குடியுரிமை பெற்றவர்களில் அடங்குவர்.

    குடியுரிமை பெற்றவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகப்பேர் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 10 ஆயிரத்து 987 பேரும், பெண்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 234 பேரும் ஆவர். குடியுரிமை பெற்றவர்களில் மெக்சிகோ நாட்டினர் முதலிடத்திலும், இந்தியர்கள் 2-வது இடத்தையும் பெற்று உள்ளனர். #USCitizenship #indians
    ×